வவுனியாவில் மாணவன் ஒருவரை காணவில்லை!!

வவுனியாவில் மாணவன் ஒருவரை காணவில்லை!!

வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வரும் சதீஜ்வரன் கோபிகன் என்ற மாணவனை நேற்று (18.04) மாலையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவனை நேற்று மாலை வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இறுதியாக கண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் தனது மகன் காணாமல் போனது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொண்டுள்ளதாக காணாமல் போன மாணவனின் தந்தை எஸ்.சதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மாணவனை யாராவது அடையாளம் கண்டால் 0779169113 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

மாணவன் காணாமல் போனமை தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Copyright © 0728 Mukadu · All rights reserved · designed by Speed IT net