வவுனியாவில் 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்கு தாக்குதல்!

வவுனியாவில் 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்கு தாக்குதல்!

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20 க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலமையில் வவுனியா நகரசபை வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் இருபதுக்கு அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் பத்துக்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை , சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , அதிக சத்தம் ஓன் போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 9660 Mukadu · All rights reserved · designed by Speed IT net