யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி.

யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி- யாழ் மக்கள் மகிழ்ச்சியில்

யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக்கடிதம் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது.

இவர் சிரேஸ்ட வைத்திய நிர்வாக சேவை வைத்தி உத்தியோகத்தர் ஆவார். அவரின் நியமனத்தையிட்டு யாழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியிலுள்ளனர்.

வைத்தியர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் இந்ந நியமனத்தை வரவேற்றுள்ளனர்.

வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் வைத்திய நிர்வாகியாக யாழ் போதானா வைத்தியசாலையில் செய்த சேவை அளப்பரியது. பதவியேற்ற முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பான சேவைகள் வழங்க வழிவகுத்தார்.

தற்போது தனது வைத்தியசாலை பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்ற உள்ளதால் யாழ் மாவட்ட சுகாதார சேவை வழங்கலில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் சேவை தரம் உயர்ந்து மக்கள் தமது அண்மைய வைத்தியசபாலைகளில் திருப்திகரமான சேவைகளை பெறமுயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் நந்தகுமரன் அவர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக சென்ற பின் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

பதில் பணிப்பாளராக கனிஸ்ட வைத்திய நிர்வாக சேவை வைத்திய உத்தியோகத்தர் ஒருவர் கடமையாற்றி வந்ததது குறிப்பிடத்தக்கது.

Copyright © 8565 Mukadu · All rights reserved · designed by Speed IT net