வவுனியா தோணிக்கல் பகுதியில் வாள் ஒன்று மீட்பு.
வவுனியா,தோணிக்கல் பகுதியில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா, தோணிக்கல், ஆலடிப் பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ராஜபக்ஸ, பொலிஸ் சார்ஜன்டுகளான மல்வர ஆராய்ச்சி, படுவத்த, பொலிஸ் கொன்ஸ்தாபிள் நிஜாம் ஆகியோரே குறித்த வாளினை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.