கிளிநொச்சியில் நள்ளிரவில் பாரிய விபத்து.

கிளிநொச்சி நகரில் நள்ளிரவு 1.30 மணியளவில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்ததுடன், மேலும் மூவர் சிறு காயத்திற்குள்ளாகினர்.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

குறித்த விபத்து பாரிய அளவில் இடம்பெற்றுள்ளபோதிலும், தெய்வாதீனமாக உயிரிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பளையிலிருந்து முறிகண்டி திசை நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

கிளிநொச்சி நகரின் நீதிமன்றத்திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் உள்ள மரம் ஒன்றில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகமாக பணயித்த ரிப்பர் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்றபோது குறித்த ரிப்பர் வாகனத்தில் ஐவர் பயணித்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மரத்துடன் மோதுண்டு அண்மையில் மேலும் இரு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற விபத்துடன் குறித்த மரம் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், அது தற்போது முறிந்து விழும் தருவாயில் உள்ளமையால் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net