விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே கிடையாது!

விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே கிடையாது!

விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே கிடையாது என மூத்த ஊடகவியலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பெயர் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த அவர், குறித்த பெயரை வைத்து பலரும் உழைக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை பொருத்தவரையில், விடுதலைப்புலிகளின் பிரச்சினைகள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக விடுதலைப்புலிகளுக்கான தடையை இந்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0153 Mukadu · All rights reserved · designed by Speed IT net