இன்று கிளிநொச்சியில் சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்.

இன்று கிளிநொச்சியில் சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்.

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் இன்று கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய உள்ளிட்ட உயரதிகாரிகள், படையினர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பித்த குறித்த நிகழ்வு டிப்போ சந்திவரை சென்று நிறைவடைந்தது.

இதன்போது படையினரின் பாண்ட் வாத்திய அணி வகுப்பு இடம்பெற்றதுடன், படைப்பிரிவினரும் பேரணியாக சென்றனர்.

யுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சமாதானத்தின் தசாப்தம் என படையினரால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net