வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணியில் இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றும் பட்டா ரக வாகனமும் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதியான நெடுங்கேணியை சேர்ந்த குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், தவம் எனப்படும் வெளிநாட்டவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணையை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 4112 Mukadu · All rights reserved · designed by Speed IT net