வவுனியாவில் ரிஷாட்டுக்கு எதிராக சுவரொட்டிகள்

வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக சுவரொட்டிகள்

வவுனியாவில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மதவாதி, தேசதுரோகியாகிய ரிஷாட் பதியுதீனை உடனடியாக நாடாளுமன்றத்திலிருந்து நீக்கவும் என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டு வவுனியா மணிக்கூட்டு கோபுரம் தேக்கவத்தை, மூன்றுமுறிப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்துடன் ரிசாட்டுக்கு நெருக்கமானவர்களுக்கும் தொடர்புவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிசாட்டை பதவியிலிருந்து நீக்கவேண்டுமென தெரிவித்து வவுனியாவில் பதாதைகள்ஒட்டப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

Copyright © 9464 Mukadu · All rights reserved · designed by Speed IT net