யாழ். சாவகச்சேரியில் வாகன விபத்து ஒருவர் பலி!

யாழ். சாவகச்சேரியில் வாகன விபத்து ஒருவர் பலி; டிப்பர் வாகன சாரதி கைது!

யாழ். சாவகச்சேரி ஏ-9 வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நுணாவில் பொது நூலகத்துக்கு முன்பாக நேற்றிரவு (27) இடம்பெற்ற இந்த விபத்தில், மீசாலை மேற்கைச் சேர்ந்த மகேஸ்வரன் சுரேந்திரகுமார் (45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மீசாலை மேற்கைச் சேர்ந்த கதிரேசு உதயன் (வயது 35) என்பவர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்து,விசாரணையைமுன்னெடுத்துள்ளனர்.

Copyright © 7315 Mukadu · All rights reserved · designed by Speed IT net