தேவிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு!

தேவிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியில் உள்ள கிணற்றினை இறைக்கும் போது போரில் கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில நேற்று மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியின் உரிமையாளர் கிணற்றினை இறைத்து துப்பரவு செய்யும் போது வெடிபொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் இருப்பதை இனங்கண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அருகில் உள்ள படைமுகாமிற்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த படையினர் கிணற்றிலிருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இதன்போது கைக்குண்டுகள் இரண்டும், ஆர்.பி.ஜி.குண்டு ஒன்றும், துப்பாக்கி ரவைகள் உந்துருளி ஒன்றும் மற்றும் இரும்பு பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Copyright © 9642 Mukadu · All rights reserved · designed by Speed IT net