கெக்கிராவையில் பதற்ற நிலை : பொலிஸார் குவிப்பு! மூவர் பலி!

கெக்கிராவை திப்பட்டுவெவவில் வாகன விபத்தில் மூவர் பலியான சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த விபத்து இன்று காலையிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னா் டிப்பர் ரக வாகனத்தை கெக்கிராவ – ரணஜயபுர பகுதியில் வைத்து பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

Copyright © 2574 Mukadu · All rights reserved · designed by Speed IT net