போதநாயகி இவ்வளவு பணத்தை செந்தூரனிற்கு கொடுத்தாரா?

போதநாயகி இவ்வளவு பணத்தை செந்தூரனிற்கு கொடுத்தாரா? அதிர்ச்சி தகவல்!

கிழக்கு பல்கலைகழகத்தின் பெண் விரிவுரையாளர் போதநாயகியிடம் இருந்து, அவரது கணவன் பெருமளவு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டதாக போதநாயகியின் நண்பிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று போதநாயகியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த பின்னர் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

கிழக்கு பல்கலைகழக பெண் விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்தின் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.

கணவனின் நடவடிக்கைகளால் அவர் தற்கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. போதநாயகியின் தாயாரும் அதை பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

திருமணத்தின் முன்னரும், பின்னரும் போதநாயகியை அவர் சித்திரவதை செய்தது, செந்தூரனின் வேறு திருமணம் பற்றியெல்லாம் பகிரங்கமாக பேசி, பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இவ்வளவு சர்ச்சை, குழப்பத்திற்குள்ளும் எதுவும் பேசாமல் செந்தூரன் தரப்பு மௌனமாக இருக்கிறது.

இந்த நிலையில் இன்று பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், போதநாயகியின் நண்பிகள் கூட்டாக வவுனியாவிலுள்ள போதநாயகியின் வீட்டிற்கு சென்றனர்.

இதன்போது, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

//அம்மா , ஒரு 60000 ரூபா காசு தாறேன். உங்கட அக்கவுண்டில் வச்சிருங்கோ. எனக்கொரு exam வருது.

அதுக்கு காசு கட்ட வேணும்’ என்று போதா சொன்னதாகவும் சரி , நீ அனுப்பு , நான் வைத்திருக்கிறேன் என்று தான் சொன்னதாகவும் போதாவின் தாயார் சொல்கிறார்.

அப்படியாயின் , லட்சத்துக்கு அதிகமாக சம்பளம் வாங்கும் போதாவினால் தன் பரீட்சைக் கட்டணத்தை கூட தன் செலவுக்கு எடுத்துக்கொள்ள முடியாத அடக்குமுறை அவரது கணவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்.

திருமணமாகி 5 மாதங்களில் போதாவிடமிருந்து கிட்டத்தட்ட 50 லட்சத்தை அபகரித்துக்கொண்ட செந்தூரன், அந்த குடும்பத்தின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?//

போாநாயகியின் வீட்டிற்கு சென்று வந்த பின்னர், அவரது நண்பியொருவர் முகப்புத்தகத்தில் பதிவு செய்த தகவல் இது.

போதநாயகியின் வங்கி கடனில்தான் கார் வாங்கப்பட்டது, இதைவிட பெரமளவு பணம் வழங்கப்பட்டது என்ற தகவல்கள் முன்னரே வெளியாகியிருந்தன.

எனினும், எவ்வளவு பணம் வழங்கப்பட்டிருக்கலாமென்ற தகவலெதுவும் வெளியாகியிருக்கவில்லை.

தற்போதுதான் அண்ணளவான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஏழைக்குடும்பத்திற்கு அந்த பணம் திரும்பி செல்லுமா?

Copyright © 4796 Mukadu · All rights reserved · designed by Speed IT net