திரைப்பட உலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் பாரதிராஜா!

திரைப்பட உலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா!

திரைப்பட உலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை கலைஞர்கள் அனைவரும் தென்னிந்திய கலைஞர்களை பார்த்தே ஊக்கத்துடன் வளர்ந்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2743 Mukadu · All rights reserved · designed by Speed IT net