முல்லைத்தீவில் பொதுச் சந்தை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவில் பொதுச் சந்தை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு, குமுழமுனை பொதுச் சந்தையின் புனரமைப்புப்பணிகள் இன்று காலை 9மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குமுழமுனைப்பிரதேச சபை உறுப்பினர் இ.கவாஸ்கரின் முயற்சியினால் சபைக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் அடிப்படையில் குமுழமுனையின் பொதுச்சந்தையில் அடிப்படைத் தேவைகள் காணப்படுவதாகவும் அதனை நிறைவேற்றுவதற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் இன்று காலை புனரமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வசதியற்ற நிலையில் காணப்பட்டுள்ள குமுழமுனை பொதுச்சந்தை மக்களின் நீண்டநாள் தேவையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் சந்தையைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு இரண்டு நுழைவாயிக்ளுக்கும் பிரதான வீதிகள் கிரவல் இட்டு அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Copyright © 5321 Mukadu · All rights reserved · designed by Speed IT net