டெல்லியில் புயலுடன் கூடிய மழை: 57 பேர் பலி!

டெல்லியில் புயலுடன் கூடிய மழை: 57 பேர் பலி!

டெல்லி புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக, ஒடிசா மாநிலத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே, கடந்த 11 ஆம் திகதி கரையைக் கடந்தது.

இதனை அடுத்து, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த காற்றுடன் அடை மழை பெய்து வருகிறது.

இதனால், அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

அனர்தங்களில் ஏற்பட்ட சேதம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2187 Mukadu · All rights reserved · designed by Speed IT net