பஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் பலி!

பஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் பலி!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் (Amritsar) ரயில் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வட மாநிலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் தசரா பண்டிகை கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த கூட்டத்தின் மீது ரயில் மோதியுள்ளது.

தண்டவாளம் அருகே கொண்டாட்டத்தின் பொருட்டு சுமார் 100க்கு மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

அப்போது நடத்தப்பட்ட வானவேடிக்கைகளின் ஒலி மற்றும் ஒளியினால் ரயில் வருவதை யாரும் அவதானிக்கவில்லை.

இதனால் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.

மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர்க் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Copyright © 2013 Mukadu · All rights reserved · designed by Speed IT net