ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குண்டு வெடிப்பு: மூவர் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குண்டு வெடிப்பு: மூவர் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம்- லாரூவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம்- குல்காம் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை அறிந்த பெரும்பாலான மக்கள் லாரூவில் திரண்டுள்ளனர். இதன்போது அங்கு திடீரென்று குண்டு வெடித்துள்ளது.

இதில் 3 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததோடு, காயமடைந்த பலர் ஸ்ரீநகர் அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக காஷ்மீர் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 6577 Mukadu · All rights reserved · designed by Speed IT net