மீண்டும் 24 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை மழை எச்சரிக்கை!

மீண்டும் 24 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை மழை எச்சரிக்கை!

மீண்டும் 24 மணி நேரத்தில் பரவலாக மழை, ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நேற்று(வியாழக்கிழமை) தொடங்கியது.

24 மணி நேரத்தில் படிப்படியாக தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.

சென்னையில் தொடர்ந்தும் 4 நாட்களாக மழை பெய்துவருவதால, அங்கு இதமான குளிர் நிலவுகின்றது. மேலும் தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டமும் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கடலோர மாவட்டங்களிலும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கின்றது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை அண்டியுள்ள பகுதியிலும் காற்றழுத்தம் நீடிக்கின்றது.

தென் தமிழகத்திலும் அதனை அண்மித்துள்ள பகுதியிலும் இவ்வாறானதொரு நிலை காணப்படுகின்றது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை அண்மித்துள்ள கடலோர கர்நாடகாவிலும், காற்றழுத்தம் நீடிக்கின்றது.

இதனால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு உள் கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் பலத்த மழை தெடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Copyright © 2528 Mukadu · All rights reserved · designed by Speed IT net