யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும், அதனைத் தொடர்ந்து நண்பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், அன்று மாலை யாழ்மாவட்ட செயலகத்தில் 170 பேருக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு புனரமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இந்த இழப்பீட்டுத் தொகையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட திட்டங்களை ஏற்படுத்தி மேலும் இழப்பீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்கவும், எஞ்சியவர்களுக்கும், உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 9273 Mukadu · All rights reserved · designed by Speed IT net