கம்போடிய கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் முகமாலைக்கு விஜயம்

கம்போடிய கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் முகமாலைக்கு விஜயம்

கம்போடிய கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி முகமாலை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இன்று(07) காலை ஒன்பது மணியளவில் ஒன்பது பேர் அடங்கிய கம்போடிய கண்ணி வெடி அகற்றும் குழுவினர் முகமாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இலங்கையில் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணியை பார்வையிட்டுள்ளனர்.

கம்போடியாவும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அதிகளவு கண்ணி அபாயம் நிறைந்த நாடாக காணப்படுவதனால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வெற்றிக்கரமான கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட குறித்த குழுவினர் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கண்ணிடி வெடி அகற்றும் நிலையத்தின் ஏற்பாட்டில் இக் குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்

Copyright © 3697 Mukadu · All rights reserved · designed by Speed IT net