இந்தியாவில் விதவைகளே இல்லாத கிராமம்: ஆச்சரியம் ஆனால் உண்மை!

இந்தியாவில் விதவைகளே இல்லாத கிராமம்: ஆச்சரியம் ஆனால் உண்மை!

இந்தியாவில் விதவைகளே இல்லாத கிராமம் ஒன்று உள்ளது. அது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுகிறதல்லவா? இதோ இப்படித்தான்,

இந்தியாவில் ஒரு கிராமத்தில் கணவர் உயிரிழந்தால் அவர் குடும்பத்தை சேர்ந்த வேறு நபரை மனைவி திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தின் மண்டலா மாவட்டத்தில் உள்ள பிஹங்கா கிராமத்திலேயே இந்த நடைமுறை இருந்துவருகிறது.

இதன்காரணமாக புழனெ எனப்படும் பழங்குடியினர் வாழும் இந்த கிராமத்தில் விதவைகளே கிடையாது.

ஒரு பெண்ணின் கணவர் உயிரிழந்து விட்டால் அந்த மனைவி கணவரின் குடும்பத்தில் உள்ள திருமணமாகாத ஆணை மணந்து கொள்ளலாம்.

அந்த ஆண், கணவரின் அண்ணன் அல்லது தம்பியாக தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி விதவையான பெண்ணை திருமணம் செய்ய ஆணுக்கு விருப்பமில்லை என்றால், குறித்த நபர் அந்த பெண்ணுக்கு வெள்ளி வளையலை பரிசாக கொடுக்க வேண்டும்.

அதுவும் கணவர் இறந்த பத்தாவது நாளில் தான் இதை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 8703 Mukadu · All rights reserved · designed by Speed IT net