கரைச்சி பிரதேச சபையின் அசமந்தபோக்கால் எழுபது லட்சம் எறிந்து நாசம்.

கரைச்சி பிரதேச சபையின் அசமந்தபோக்கால் எழுபது லட்சம் எறிந்து நாசம்.

கிளிநொச்சிக் கரைச்சிப் பிரதேச சபையின் அசமந்தப் போக்கினால் நேற்று (12.11.2018) இரவு கிளிநொச்சிக் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடை ஒன்று எரிந்ததில் சுமார் எழுபது லட்சம் பெறுமதியான பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளது

கடையில் ஏற்ப்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக திடீர் என கடை தீப்பிடித்து எரிந்துள்ளது உடனடியாக மின்சார சபை ,மற்றும் கரைச்சிப் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது

மின்சார சபையினர் குறித்த பகுதிக்கான மின்சார இணைப்பினை துண்டித்ததன் பின்னர் அங்கு கூடிய இளைஞர்கள் , மக்கள் என பலரும் தீயை பகுதி அளவில் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்ததன் பின்னர் கரைச்சிப் பிரதேச சபை நீர்த்தாங்கிகள் மூலம் குறித்த கடைத் தொகுதியின் மேல் மாடியில் பிடித்திருந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 97 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு நவீன தீயணைப்பு இயந்திரம் அடங்கலாக தீயணைப்பு பிரிவு கையளிக்கப் பட்டிருந்தது குறித்த தீயணைப்பு இயந்திரம் இயங்கு நிலைக்கு வராமையால் குறித்த பல லட்சம் இழப்பு இடம்பெற்றுள்ளது

பல போராட்டங்களின் மத்தியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெறப்பட்ட இவ் தீயணைப்பு படை இருந்த போதும் இவற்றை தயார் நிலையில் வைத்திருக்காமல் இவ் இழப்பு இடம்பெற்றது கரைச்சி பிரதேச சபையின் அசமந்தப் போக்கு என மக்கள் தெரிவிக்கின்றனர்

Copyright © 8527 Mukadu · All rights reserved · designed by Speed IT net