குடா நாட்டில் பலத்த கற்று வீசும் – வலுப்பெறும் கஜா புயலால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

குடா நாட்டில் பலத்த கற்று வீசும் – வலுப்பெறும் கஜா புயலால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறும்.

இந்த புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் மன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஊடாகக் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதேவேளை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அத்துடன், கிழக்கு கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறையினூடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © 8986 Mukadu · All rights reserved · designed by Speed IT net