கஜா புயல்: யாழில் 700 குடும்பங்கள் பாதிப்பு!

கஜா புயல்: யாழில் 700 குடும்பங்கள் பாதிப்பு!

கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கஜா புயல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”யாழ். மாவட்டத்தில் நிலைக்கொண்டிருந்த கஜா புயல் நேற்று மாலை 6.10 மணிமுதல் இன்று அதிகாலை வரை கடுமையாக வீசியது.

கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை.

ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சிறுதொழில் முயற்சியாளர்களின் கடைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 படகுகள் ஆகியனவும் சேதமடைந்துள்ளன.

தற்போது காற்றின் வேகம் குறைவடைந்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Copyright © 1969 Mukadu · All rights reserved · designed by Speed IT net