ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையான் விடுதலையாவார் என சென்றவர்களுக்கு ஏமாற்றம்!

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையான் விடுதலையாவார் என சென்றவர்களுக்கு ஏமாற்றம்!

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் அவர் இன்று விடுதலை செய்யப்படுவர் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது நீதிமன்றக் கட்டடத்தொகுதிக்கு முன்னால் கட்சி உயர்பீட உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் காத்திருந்தனர். இருப்பினும் அவரது விளக்கமறியலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரையும் நீடித்து நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவத்தில், குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு 10 ஆம் மதம் 11 ஆம் திகதி பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0590 Mukadu · All rights reserved · designed by Speed IT net