காஷ்மீரில் கடும் மோதல்: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் கடும் மோதல்: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு – காஷ்மீரில் இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டம் ஹிபுரா படாகன்ட் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து பாதுகாப்புப்படையினர் சில வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் தொலைபேசி மற்றும் இணையத் தள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Copyright © 3215 Mukadu · All rights reserved · designed by Speed IT net