வடிவேல் சுரேஸ் மீது தாக்குதல் முயற்சி: பொலிஸில் முறைப்பாடு

வடிவேல் சுரேஸ் மீது தாக்குதல் முயற்சி: பொலிஸில் முறைப்பாடு

தன்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று (ஞாயிற்றுக்கிழமை) பசறை கேட்போர் கூடத்தில் இடம்பெறவிருந்த நிலையில், அதற்கு வருகை தரவிருந்த உறுப்பினர் வடிவேல் சுரேஸைத் தாக்குவதற்கு சிலர் தயாராக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை நடத்துவதற்கு அவர்கள் ஆயுதங்களுடன் குறித்த பிரதேசசபை வளாகத்தில் காத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையறிந்த தான் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அவ்விடத்தினை விட்டு உடனடியாக வெளியேறிச் சென்றுவிட்டதாகவும் வடிவேல் சுரேஸ் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 2862 Mukadu · All rights reserved · designed by Speed IT net