பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்ட இருவர் கைது.

பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்ட இருவர் கைது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு மும்பை – முளுந் சந்தியில் உள்ள மெஹுல் வட்டாரத்தில் குறித்த இருவரும் பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 வயதான மதியழகன் சுந்தரம் மற்றும் 24 வயதான பழனிவேல் ரவீந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 5461 Mukadu · All rights reserved · designed by Speed IT net