உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை!

உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை!

உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களுக்கு கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன.

இதனால், அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

இதனால் விசேஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில்; தங்கி செல்வார்கள்.

அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளின்; உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, விடுதிகளில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Copyright © 7738 Mukadu · All rights reserved · designed by Speed IT net