42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைப்பு!

42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைப்பு!

மட்டக்களப்பு புனித லூர்து மாதா ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் நிக்லஸ் அடிகளார் தலைமையில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.

மூன்றாவது ஆண்டாகவும் யேசுப்பிறப்பினை சிறப்பிக்கும் வகையில் இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அருட்தந்தை லோறன்ஸ் நிக்லஸ் அடிகளாரினால் விசேட பூஜை நடாத்தப்பட்டு கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

காண்போரை வெகுவாக ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மரத்தினை பெருமளவான மக்கள் வருகைதந்து கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

இதன்போது கிறிஸ்மஸ் தாத்தாவும் ஆடிப்பாடி மக்களை மகிழ்வித்திருந்தார்.

Copyright © 9045 Mukadu · All rights reserved · designed by Speed IT net