அ.தி.மு.கவுடன் இணைவது என்பது தற்கொலைக்குச் சமம்!

அ.தி.மு.கவுடன் இணைவது என்பது தற்கொலைக்குச் சமம்!

அ.தி.மு.கவுடன் இணைவது என்பது தற்கொலைக்குச் சமம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் இணைவது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தொண்டர்கள் மட்டுமே இணைய மட்டுமே வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் போன்றவர்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்கள். இருப்பினும் நான் இந்த ஆட்சியை மாற்றிவிட்டு ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டுவரும் எண்ணத்தில் இருக்கிறேன்.

அந்தவகையில் இவர்களுடன் இணைவது என்பது தற்கொலைக்குச் சமம் என்பதை பலமுறை கூறிவிட்டேன்” என தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தன்னை சந்திக்க ஆட்களை அனுப்பி வருவதாக, தினகரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net