பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில்வாழும் 6 பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி

கிளிநொச்சி பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில்வாழும் 6 பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் அனந்தி சசிதரன் கலந்து கொண்டிருந்தார்.

கிளிநொச்சி பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில்வாழும் 6 பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் அனந்தி சசிதரன் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. புலம்பெயர் வாழ் உறவுகளின் உதவியுடன் குறித்த குடும்பங்களிற்கு கோழிக்குஞசுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,
பல்வேறு இடர்கள் மத்தியில் வாழ்ந்துவரும் இந்த குடும்பங்களிற்கு கனடாவில் உள்ள குடும்பத்தாரின் உதவியுடன் இன்று வாழ்வாதாரம் ஒன்றை வழங்கியுள்ளோம்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாதுள்ளதாக சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், யுத்த்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குகளை பெற்று சென்றுள்ள இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.

இன்று சசிதரன் அவர்களின் தந்தை காணாமல் போன எனது மகன் வருவாரா இல்லையா என தெரியாதவாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் திரு சம்பந்தன் அவர்கள் எதிர்கட்சி தலைவர் பதவியினால் எதையும் செய்ய முடியாது என குறிப்பிட்ட கருத்து தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்.

அவ்வாறு எதையும் செய்ய முடியாது என கூறும் பதவியை மூன்றரை வருடமாக எதற்கு வைத்திருந்தார்கள்.

எதி்கட்சி தலைவர் பதவி என்பது நாடு முழுவதற்குமான முக்கிய பதவியாக உள்ளது. அப்பதவியை வைத்து மூன்றரை வருடமாக இவரால் எதையும் செய்ய முடியவில்லை.

ஐக்கிய தேசிய கட்சிக்குமுண்டு கொடுக்கும் வகையிலேயே இவர்கள் செயற்பட்டு வந்துள்ளதாகவும், இவை தொடர்பில மக்கள் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net