கிளிநொச்சியில் வாகனம்  தடம்புரண்டதில் மாடு உயிரிழந்தது! 

கிளிநொச்சியில் வாகனம்  தடம்புரண்டதில் மாடு உயிரிழந்தது!

கிளிநொச்சி – பரந்தன், ஏ 35 வீதியின் கண்டாவளை பகுதியில் கப் ரக வாகனம், மாடொன்றுடன் மோதி தடம்புரண்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு பரந்தன் நோக்கி பயணித்த கப் ரக வாகனமே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

வாகனத்துடன் மோதிய மாடு உயிரிழந்துள்ள போதும், சாரதி எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 2468 Mukadu · All rights reserved · designed by Speed IT net