வவுனியாவில் குழு தாக்குதல்: மூவர் படுகாயம்!

வவுனியாவில் குழு தாக்குதல்: மூவர் படுகாயம்!

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 17,19,25 வயதுடைய மூன்று இளைஞர்களே, படுகாயமடைந்த நி லையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடேமோதலுக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை மகாறம்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net