யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இயங்கிய சீ.ரி ஸ்கானர் பழுது!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இயங்கிய சீ.ரி ஸ்கானர் பழுது : மக்கள் விசனம்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இயங்கிய சீ.ரி ஸ்கானர் பழுதின் காரணமாக நோயாளர்கள் வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்ட வைத்தியசாலைகளிற்கு அனுப்பப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ். குடா நாட்டில் இயங்கும் 30 வைத்தியசாலைகளிற்கும் பொதுவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டுமே சீ.ரி.ஸ்கானர் உள்ள நிலையில் குறித்த ஸ்கானர் கடந்த 20 தினங்களாக பழுதடைந்து காணப்படுகின்றது.

இதன் காரணமாக மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் நிலையும் அங்கிருந்தும் வெளி மாவட்டங்களிற்கே அனுப்பி வைக்கப்படுகின்ற நிலைமையுமே உருவாகியுள்ளது.

எனவே கருத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்குமாறு நோயாளர்கள் கோருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள ஸ்கானரும் 8 ஆண்டுகள் பழமையானது.

அதேநேரம் போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கு இரண்டு ஸ்கானர் தேவையான போதிலும் ஒரேயொரு ஸ்கானர் மட்டுமே உள்ளது.

இவ்வாறுள்ள ஸ்கானரில் நாள் ஒன்றிற்கு 60 ஸ்கானிங் இடம்பெறுகின்றன. இவற்றின் காரணமாக மேற்படி நிலமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த ஸ்கானர் சீர் செய்ய ஆவண செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Copyright © 2918 Mukadu · All rights reserved · designed by Speed IT net