பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட 3 பரீட்சார்த்திகளை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நேற்று இடம்பெற்ற கணிதபாடத்தின் போது மோசடியில் ஈடுபட்ட 3 பரீட்சார்த்திகளே இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பரீட்சார்த்திகள் கல்முனை, தனமல்வில மற்றும் திககொட ஆகிய பிரதேசங்களில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

குறித்த 3 பரீட்சார்த்திகளும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net