யாழில் மகன் கடுமையாக தாக்கியதில் தாய் பலி!

யாழில் மகன் கடுமையாக தாக்கியதில் தாய் பலி!

யாழ்ப்பாணம் – கைதடி, குமரநகர் பகுதியில் போதையிலிருந்த மகன் தாக்கியதில் படுகாயமடைந்திருந்த தாய் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு தேங்காய் திருவையால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் தாய்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர், அயலவர்களால் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு வைத்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கைதடி, குமரநகர் பகுதியில் வைத்து மகனான சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவரை சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Copyright © 3250 Mukadu · All rights reserved · designed by Speed IT net