காணாமல் போன மூவர் வெலிகடை சிறையில்.

jaill
வவுனியா – முத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்கள் மாலைதீவிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..

தனது இளைய சகோதரன் 2005 இல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்த போது காணாமல் போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகளின் பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மாலைதீவு சிறை ஒன்றில் உள்ளதாக கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய கௌரிராஜா கவிதா பிபிசிக்கு தெரிவித்தார்.

தனது சகோதரன் உட்பட மூன்று இளைஞர்களும் மாலைதீவு சிறையிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகிய மூவரும் மாலைதீவுகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் தெளிவில்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

BBC

Copyright © 6627 Mukadu · All rights reserved · designed by Speed IT net