இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்,கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
13221675_1621220338201467_7767739061034069401_n
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளருக்கு தெளிவுபடுத்தினார்.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளாக காணப்படும் இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கமானது இன்னும் ஆர்வமாகவும் வேகமாவும் செயற்ப்பட வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், இவ்விடயங்கள் தொடர்பில் உடனடி நிவாரணங்கள் தீர்வுகளை வழங்குவதிலிருந்து அரசு விலகி நிற்க முடியாது என்றும் எடுத்துரைத்தார்.

அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், புதிய அரசியல் யாப்பில் தேசிய பிரச்சினைக்கான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நிரந்தர தீர்வு ஒன்றை எட்டுவது மிகவும் அவசியாமானது எனவும் கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net