சகோதரர்களை கொன்று வெற்றி விழா கொண்டாட முடியாது ! பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி

Karunasena kettiyarachi_CI
யுத்­தத்தில் எமது சகோ­தர இனத்­த­வ­ரான தமி­ழர்­களை கொன்­று­விட்டு நாம் யுத்­த­ வெற்­றி­விழாக் கொண்­டாட முடி­யாது என பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி குறிப்­பிட்ட்டுள்ளார்.

விடு­த­லைப்­பு­லிகள் என்­றாலும் அவர்­களும் இலங்­கை­யர்கள் என்­பதை மறந்­து­வி­டக்­கூடாது என்று குறிப்பிட்ட அவர் சிங்­கள யுத்த வெற்­றி­விழா எனக்­கூறி மீண்டும் தமி­ழர்­களை பிரி­வி­னை­வா­தி­க­ளாக்கி அவர்­களை ஓரம்­கட்டும் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கை தகவல் திணைக்­க­ளத்தில் பாது­காப்பு அமைச்­சினால் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்கள் யாராக இருந்­தாலும் அவர்­களை நினை­வு­கூர வடக்கில் மக்­க­ளுக்கு உரிமை உண்டு. அதை நாம் தடுக்க மாட்டோம். அவர்கள் விரும்­பிய இடங்­களில் அவர்­களை நினை­வு­கூர முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை பயங்­க­ர­வாதம், இன­வாதம், அனர்த்தம் என சகல சிக்­கல்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்த நாடு. எனினும் அனர்த்­தங்கள் ஏனைய சிக்­கல்­களை அனைத்­தையும் விடவும் யுத்­தமே நாட்­டுக்கு பாரிய இழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்­களில் போர்­வெற்றி தினத்தை இரா­ணுவ வெற்றி தின­மாக கொண்­டாடி வந்­த­போ­திலும் இம்­முறை வெற்றி தின­மாக கொண்­டா­டாது விடு­தலை தின­மாக கரு­தியும் யுத்­தத்தில் உயிர் நீத்த இரா­ணுவ வீரர்கள், பொது­மக்­களை நினை­வேந்­தியும் அனுஷ்­டிக்­கப்­படும் என்றார்.

கடந்த காலங்­களில் போலன்றி இப்­போது நாட்டில் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு பற்­றிய செயற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில் சகல மக்­க­ளையும் உள்­ள­டக்­கிய வகையில் அனுஷ்­டிக்­கப்­படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த போர்­வெற்றி தினத்தில் ஆடம்­ப­ர­மான எந்த செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­காது சாதா­ர­ண­மாக முப்­படை அணி­வ­குப்பும், பொலிஸ் மற்றும் சிவில் துறையின் அணி­வ­குப்­பு­களும் நடை­பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் கலை நிகழ்­சிகள், மற்றும் இரா­ணுவ வீரர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு கௌரவம் செலுத்தும் நிகழ்­வுகள் மட்­டுமே இடம்­பெறும் என்றும் ஜனா­தி­பதி தலைமை தாங்கும் இந்த நிகழ்வில் மேல்­மா­காண அர­சியல் பிர­மு­கர்கள், மாகா­ண­சபை, பிர­தே­ச­சபை உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­வார்கள் என்றும் தெரிவித்தார்.

வடக்கில் விடு­த­லைப்­பு­லி­களின் நினை­வேந்தல் நிக­வுகள் நடை­பெறும் என பிரச்­சாரம் செய்­து­வந்­தாலும் அதில் எந்த உண்­மை­களும் இல்லை எனத் தெரிவித்த அவர் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்­களை அனுஷ்­டிக்­கவே அவர்கள் ஒன்­று­கூ­டு­வ­தாகவும் தெரிவித்தார்.

எந்த சந்­தர்ப்­பத்­திலும் புலி­களை நினை­வேந்தும் நட­வ­டிக்­கை­யாக அமை­யாது என்றும் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்கள் யாராக இருந்­தாலும் அவர்­களை நினை­வு­கூர அவர்­க­ளுக்கு உரிமை உண்டு என்றும் அதை நாம் தடுக்க மாட்டோம். அவர்கள் விரும்­பிய இடங்­களில் அவர்­களை நினை­வு­கூர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட நாளை யுத்த வெற்­றி­நா­ளாக கொண்­டாட வேண்டும் என ஒரு­சிலர் கூறு­வதாகவும் அவ்­வாறு கொண்­டாட நாம் தயா­ராக இல்லை எனத் தெரிவித்த அவர் இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான யுத்­த­மாக இருந்தால் நாம் வெற்­றி­பெற்­றதை கொண்­டாட முடியும் என்றும் கூறினார்.

இந்த யுத்தம் ஒரு நாட்­டினுள் சகோ­தர இனங்­க­ளுக்கு இடையில் இடம்­பெற்ற மோதல். இதில் எமது சகோ­தர உற­வுகள் தான் கொல்­லப்­பட்­டனர் என்றும் விடு­த­லைப்­பு­லிகள் ஆயுத இயக்­க­மாக இருந்­தாலும் கூட அவர்­களும் இலங்­கை­யர்கள். அவர்­களும் ஏதோ ஒரு உரி­மைக்­கான போராட்­ட­மாக இதை முன்­னெ­டுத்­தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் 1979ஆம் ஆண்டு வன்­முறை போராட்டம் எடுக்­கப்­பட்­ட­போ­திலும் இன்று அவர்கள் ஏனைய கட்­சி­களை விடவும் வித்­தி­யா­ச­மான ஜன­நா­யக வாதி­க­ளாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளதாக கூறிய அவர் அதே­போ­லவே விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பா­டு­களும் காணப்­ப­டு­வதாகவும் தெரிவித்தார்.

இன்று விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் அழிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் எமது சகோ­த­ரர்­களை கொன்­று­விட்டு நாம் வெற்றிவிழா கொண்டாட தயாராக இல்லைஎன்றும் குறிப்பிட்டார்.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வாறு இருக்கையில் மீண்டும் தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி அவர்களை ஓரம்கட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net