3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்.

wigneswaran_CI
வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன.

இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் இன்று பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த பதவி கையளிப்பு இன்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது.

வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், நன்னடத்தையும் சிறுவர் பாராமரிப்புச் சேவைகளும், சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்கள் பா.சத்தியலிங்கம் வசம் இருந்தன.

இவற்றில் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கள் இன்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net