ஒரு பக்கமாக இருந்து பயணிக்க தடை .

1452477535Lade
மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணிக்கும் இரு பாலாரும் இரண்டு பக்கங்களும் கால்களை வைத்தவாறே பயணிக்க வேண்டும் எனவும், மோட்டார் சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிப்பதால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கீழே விழுவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருபக்கமாக இருந்து பயணிப்பதால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், போக்குவரத்து சட்டத்தின் பிரகாரம் இந்தக் குற்றத்திற்கு பொலிஸார் தண்டப்பணம் அறவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, இவ்வாறான குற்றங்கள் நீதிமன்றத்திற்கே அனுப்பப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எனவே அனைவருக்கும் முதல் தடவை மன்னிப்பு வழங்குவதாகவும் மீண்டும் இவ்வாறு நடக்கும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு குற்றம் அனுப்பப்படும் எனவும் சாரதிகளுக்கு கிளிநொச்சி போக்குவரத்து பிரிவு பொலிஸார் எச்சரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 6525 Mukadu · All rights reserved · designed by Speed IT net