அரிய வாய்ப்பு : ஜனாதிபதி மாளிகையை நீங்களும் பார்வையிடலாம்.

MR01092015L_2
இலங்கையின் தலைநகர் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை முதல் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

நாளை முதல் 6 நாட்களுக்கு ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஜனாதிபதி ஊடகப் பரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு அமையவே ஜனாதிபதி மாளிகை திறந்து வைக்கப்படவுள்ளது.

மக்கள் பார்வைக்காக, ஜனாதிபதி மாளிகையை திறந்து வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த மாளிகை ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆளுனர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக காணப்பட்டது.

1948 இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், குறித்த இடம் ஆளுர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக மாறியதுடன் 1972 இலங்கை குடியரசு நாடாக மாற்றப்பட்டதன் பின்னர் குறித்த மாளிகை ஜனாதிபதி மாளிகையாக மாற்றப்பட்டது.

29 ஆளுனர்களின் வாசஸ்தலமாக காணப்பட்ட ஜனாதிபதி மாளிகை இந்நாட்டு 6 ஆளுனர்கள் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்தப்பட்டது.
வீரகேசரி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net