யுத்தத்தின் போது இரசாயனங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை – பிரதமர்

ranil__2__CI
யுத்தத்தின் போது இரசாயனங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மக்களின் உடலில் இரசாயனங்கள் உட்புகுந்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது அனைவரும் அறிந்த விடயமே என்ற போதிலும் இரசாயன கசிவுகள் பற்றிய எவ்வித ஆதாரமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தரப்பினரும் பயன்படுத்திய எறிகணைத் தாக்குதல்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டமை உண்மையானதே என அவர் தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net