வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் இனம் காணக்கூடிய நிலையில் விசாரணை அறிக்கை

punkuduthivu_1புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்றவாளிகள் ,இனம் காணப்பட கூடிய நிலையில் குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை உள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளபப்ட்டது.

அதன் போது குறித்த வழக்கில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள 12 பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் போது, வழக்கின் குற்றவாளிகள் இனம் காணக்கூடிய நிலை உள்ளதா என சட்டத்தரணி ரஞ்சித்குமார் , மன்றில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நீதிவான் , வழக்கின் விசாரணைகள் அனைத்தையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு , அதன் அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

அதன் பிரகாராம் சட்டமா அதிபர் திணைக்களம் சரியான முடிவினை எடுக்கும். வழக்கில் குற்றவாளிகளை இனம் காணக்கூடிய வாறு விசாரணை அறிக்கை உள்ளது என தெரிவித்தார்.

குளோபல் தமிழ்

Copyright © 4029 Mukadu · All rights reserved · designed by Speed IT net