இளம் பத்திரிகையாளரும் காட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர்சன் மரணம்.

download-2ஈழத்தை சேர்ந்த இளம் பத்திரிகையாளரும் காட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர்சனின் திடீர் மறைவு அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. மேற்கு நாடு ஒன்றில் புகலிடம் அடையச் சென்ற வேளையிலேயே ஒவ்வாமை காரணமாக அஸ்வின் சுதர்சன் திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாக் கொண்ட அஸ்வின் சுதர்சன் சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தினக்குரல் பத்திரிகையில் காட்டூனிஸ்டாக பணிபுரிந்து தன்னுடைய கேலிச்சித்திரங்கள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் மிகவும் நெருக்கடியான காலங்களில் ஊடகப் பணியாற்றிய அஸ்வின் சுதர்சன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருதையும் வென்றவராவார்.

மேற்கு நாடு ஒன்றில் அடைக்கலம் புகும்பொருட்டு பயணிக்கும்போது உக்ரேன் நாட்டில் ஒவ்வாமை காரணமாக வயிற்றுவலி ஏற்பட்டு திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net