கிளிநொச்சி கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைப் கிராமத்தில் தர்மபுரம்பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று(30) விசேட பொலிஸ் நடமாடும் சேவை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாகவும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிர்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன அவர்களின் வழி நடத்தலின் கீழ் தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையில் இன்று(30) மாலை புளியம்பொக்கணை கிராம அலுவலகர் பிரிவு பொது மண்டபத்தில் குறித்த பொலிஸ் நடமாடும் சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு குறித்த நடமாடும் சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆரம்ப நாள் நடமாடும் சேவை நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான் ராஜபக்ச , சிவில் பாதுகாப்பு குழு பிரதி நிதிகள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்
இவ்வாறு கிளிநொச்சியில் பளை ,இராமநாதபுரம் பகுதிகளிலும் பொலிஸ் நடமாடும் சேவை இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குளோபல் தமிழ்.