பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறையும்!

பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறையும்!

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறையவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்தவகையில் ரூ.2.50 இனால் குறைவடையவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி இன்று டெல்லியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது கலால் வரிலியிருந்து ரூ. 1.50 இனை மத்திய அரசு குறைத்துள்ளதுடன் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது இலாபத்திலிருந்து ரூ. 1 இனை குறைத்துள்ளன.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆறு மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அவ்வகையில், மஹாராஷ்ட்ரா, குஜராத், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைகப்படுவதாக அறிவித்தன.

இவ்வாறு பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகள் ரூ.2.50 அளவில் குறையுமானால், ரூ. 5 இனால் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், அத்தியவசியப் பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 5880 Mukadu · All rights reserved · designed by Speed IT net