6 வயது மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!

6 வயது மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்த இளைஞர்: நேர்ந்த விபரீத சம்பவம்!

தமிழகத்தின் திருநெல்வேலியில் தன்னை விட வயதில் மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பாரதிராஜா (19). இவருக்கும் ராஜாங்கபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

மேலும் பாரதிராஜாவை விட அவர் 6 வயது மூத்தவராவார்.

இந்நிலையில் அப்பெண்ணை கோவிலில் வைத்து சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்த பாரதிராஜா அவருடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.

இது பாரதிராஜாவின் வீட்டுக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் கண்டித்தனர். இதனால் விரக்தியடைந்த பாரதிராஜா விஷம் குடித்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Copyright © 1702 Mukadu · All rights reserved · designed by Speed IT net